நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை
நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி முதலாம் திகதி (இன்று) தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது.
தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், "குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்படாது என்று என்னிடம் சவால் விடுகிறார். நான் தொடர்ந்து போராடுவேன். அரசாங்கம் இந்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment