Monday, February 10, 2020

றிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது!

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். தமிழ் மக்களின் காணிகள் சிலவற்றை மோசடியான முறையில் உறுதிகளை தயாரித்து விற்பனை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது சகோதரன் மீது மேற்கொள்ளப்படும் தொடர் விசாரணைகளின் நிமிர்த்தமே மேற்படி திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சோதனைகளின்போது தமிழ் மக்களுடையது என சந்தேகிக்கப்படும் மோசடி உறுதிகளின் பிரதிகள் 227 ம் மூலப் பிரதிகள் 8 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி உறுதிகள் யாவும் றிசார்ட் பதுயூதீனின் நெருங்கிய சகாக்களின் பெயரில் காணப்படுவதாக அறியமுடிகின்றது. தனக்குள்ள அரசியல் பலத்தை பயன்படுத்தி மோசடி செய்து நெருங்கியவர்களின் பெயர்களில் காணிகளை பதிவு செய்துகொண்டு பின்னர் அதனை விற்று பணமாக்கி கொள்வதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் அங்கிருந்து சந்தேகத்திற்குரிய ஆவனங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளது. சத்தோச நிறுவனத்தின் தலைவராகவிருந்தபோது அந்நிறுவனத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சிலவற்றின் ஆவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கொள்வனவுகளுடாக றிசார்ட் கோடிக்கணக்கான அரச பணத்தினை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ளமை யாவரும் அறிந்தவிடயமாகும்.

இதேநேரம் அவர் தனது அமெரிக்காவிலுள்ள இரகசிய வங்கிக்கணக்கொன்றுக்கு லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்கப்பட்டிருந்த நேரத்தில் 1 லட்சம் அமெரிக்க டொலர்களை குறித்த வங்கிக்கணக்கு றிசார்ட் மாற்றியுள்ளார். குறித்த மாற்றுதல் இடம்பெற்று ஓரிரு நாட்களில் மேலுமொரு பெருந்தொகையை மாற்ற முற்பட்டபோது, சந்தேகமடைந்த எப்பிஐ யினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com