சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறையிலிருந்தும் 17 கைதிகள் விடுதலை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 கைதிகள் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ள 512 கைதிகள் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்படுகின்றனர்.அதன் அடிப்படையில் ,ன்றைய தினம் யாழ் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதில் ஒரு பெண்மணி உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
மொத்தமாக யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து 17 பேர் இன்றைய தினம் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
0 comments :
Post a Comment