Friday, January 31, 2020

கொரோனா வைரஸின் எதிரொலி உலக அவசரகால நிலைமை பிரகடனம் - WHO

உலகச் சுகாதார ஸ்தாபனத்தால் உலகளாவிய அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

உலகின் பெரும்பாலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் உலகச் சுகாதார ஸ்தாபனத்தால் உலகளாவிய அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமை மாத்திரமன்றி வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் வேகத்தை அவதானித்தே இந்த அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று குறித்த ஸ்தாபனத்தின் தலைவர் ட்ரெடஸ் அடோனிம் கேப்ரியேசஸ் அறிவித்துள்ளார்.

விசேடமாக பலவீனமான சுகாதாரச் சேவைகளைக் கொண்டுள்ள நாடுகளில் இந்த வைரஸ் பெருமளவில் வியாபிக்க வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com