Saturday, January 11, 2020

Dr. ஷாபி மீண்டும் மகப்பேற்று மருத்துவராக பரிந்துரை!

குருநாகல் மாவட்ட பொது மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் முஹம்மது ஷாபிக்கு மீண்டும் அவரது வைத்தியத் தொழிலை வழங்குமாறு அரச சேவை ஆணைக்குழு சுகாதார அமைச்சிக்கு பணிந்துரை செய்துள்ளது.

கருத்தடை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த மருத்துவரின் சேவைகளை நிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது . இந்த வழக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த மருத்துவரை மீண்டும் நியமிக்குமாறு பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வழங்கவுள்ளதாக அருண செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் ஷாபி விடயத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குனர் ஷானி அபயசேகரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த தரப்புக்கள் யாவும் நவதுவாரங்களையும் அடைத்துக்கொண்டு இருப்பதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com