மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன இன்று முற்பகல் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகியதை அடுத்து எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது மனநிலை குறித்து அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதவான் திலின கமகே சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பான வழக்கு விசாரணையை நீதவான் கிஹான் குலத்துங்க பலவந்தமாக விசாரணை செய்வதாக கடந்த 12ம் திகதி சட்டத்தரணி அஜித் பிரசன்ன ஊடக சந்திப்பை நடத்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அவரை மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment