Monday, January 6, 2020

ஊழியரின் கன்னத்தில் அறைந்த கமநல உத்தியோகித்தருக்கு விளக்க மறியல் !

நிந்தவூர் கமநல சேவைகள் மந்திய நிலையத்தில் கடந்த 01.01.2020 அன்று பெண் ஊழியர் ஒருவருக்கு கன்னத்தில் அறைந்துவிட்டு தலைமறைவாகியிருந்த கமநலசேவைகள் உத்தியோகித்தர் கார்லிக் என்பவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மஜிஸ்ரேட் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று காலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் சார்பில் பெரும்தொகையான சட்டத்தரணிகள் ஆஜராகி பிணை கோரியபோது, பொலிஸார் பிணைக்கு தமது கடும் ஆட்சேபனையை தெரிவித்தனர்.

மேற்படி சம்பவமானது இனமுறுகலை தோற்றுவிக்கக்கூடியதோர் சூழ்நிலை உருவாகியுள்ள இத்தருணத்தில் சந்தேக நபருக்கு பிணைவழங்கமுடியாது என்று அவர்கள் மன்றில் தெரவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன்சார்பில் சட்டத்தரணி ஆர்த்திகா ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment