Sunday, January 5, 2020

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை. தேடுதல் நடாத்தியதன் காரணம் தெரியுமா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் நேற்று பொலிஸார் தேடுதல் நாடாத்தினர்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு அவரை கைது செய்தனர்.

இன்று விசாரணைகளின் பின்னர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதனை அடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்பினை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

அத்தோடு அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரது வீட்டில் தேடுதல் நடாத்தியது வேறொரு நோக்கம் கொண்டதாகும். குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சிலர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அலுவலக இரகசிகயங்கள் பலவற்றை வழங்கியிருந்தாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பிரகாரம் அவரது இல்லத்தில் அவ்வாறான ஆவனங்கள் ஏதும் உண்டா என்பதை அறிவதற்காகவே அங்கு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான ஆவனங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதா என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment