நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம் -ஈரான் அமைச்சர் ஜவாத் ஜரீப்
இன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.'' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தை தணிக்கும் வழியை அமெரிக்கா தேர்வு செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பதற்றத்தைத் தணிப்பது பற்றிப் பேசுவதும், அதற்கான பாதையை தேர்வு செய்வதும் மாறுபட்டவை. நிறைய பேரை, முக்கியமானவர்களை, இராக் மற்றும் இரான் அதிகாரிகளை, அன்னிய மண்ணில் அமெரிக்கா கொன்றிருக்கிறது. அது போருக்கான ஒரு செயல்.
தனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் அவர்களின் மூர்க்கத்தனம், விளைவுகளை அறியாத மனப்போக்கு, பிடிவாதம் ஆகியவற்றை வெளிக்காட்டியுள்ளது. அதுவே பதற்றத்தை அதிகரிக்கும் செயல் தான். ஈரான் மக்களுக்கான மிரட்டல் அது. அதிபர் டிரம்ப்பை, செயலாளர் பாம்பேயோ தவறாக வழிநடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். எனத் தெரிவித்த அவர்
நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேசம். நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிபர் டிரம்ப் கூறியது போல, அளவுக்கு அதிகமானதாக இருக்காது, சட்டமுறைப்படி சரியான இலக்குகளாக அது இருக்கும்.நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டை, எங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பும் ஈரானியர்களாக இருக்கிறோம். அமைதிக்காகப் போராடிய மனிதரின் இழப்பிற்கு அனைவரும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம். எனவும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment