கோட்டாவை வரவேண்டாம் என்றது சீனா!
இம்மாதம் 14 - 15 ஆம் திகதிகளில் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சீனாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை பிற்போட வேண்டி ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
சீன அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்த பிற்போடுதல் ஏற்பட்டுள்ளதாகவும் பிறிதொருநாள் அந்தப் பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் சீனாவுக்கான பயணம் பிற்போடப்பட்டமைக்கான காரணம் எதுவும் சீன அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியப் பயணம் இருந்தது. இரண்டாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் சீனாவுக்கானது.

0 comments :
Post a Comment