மனைவியின் காதலனை கொலை செய்த கணவர் நானுஓயாவில் சம்பவம்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை, நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (19) இரவு 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்கும் இடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக்கியுள்ளார்.இதன் போது சம்பவ இடத்தில் கள்ள காதலன் பலியானதோடு, கொலை செய்த நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலியான நபர் புத்தளம், வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணான்டோ (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா கைரேகை அடையாளப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு, நீதவானும் மரண விசாரணைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment