Friday, January 10, 2020

மலசலகூடங்களையே பராமரிக்க முடியாத தமிழரசுக் கட்சியினர் தமிழீழம் பெற்றுத்தரப்போகின்றனராம். மக்கள் விசனம்

கிளிநொச்சியில் தமிழரசு கட்சியினரின் நிர்வாகத்தில் உள்ள கரைச்சி பிரதேச சபையின் சந்தையில் பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடம் மிகவும் மோசமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

சந்தையில் அதிகளவு வரியினை கரைச்சி பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் தவிசாளர் வேழமாலிகிதன் அறவிட்டு வருகின்ற போதும் சந்தையில் உள்ள மலசல கூடம் உட்பட சந்தையின் சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியாத வினைத்திறனற்றவர்களாக காணப்படுகின்றனர் என பொது மக்களும் வர்த்தகர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுகிறது.என பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.


தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது. மலம்சலம் கழிக்க செல்கின்ற பொது மக்களும், வர்த்தகர்களும் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதோடு சிறுநீர் கழிக்கும் பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்பதனையும் காணக் கூடியதாக உள்ளது.

கரைச்சி பிரதேச சபையினர் சந்தையில் உள்ள வர்த்தகர்களிடம் நாளாந்தம் இவற்றுக்கெல்லாம் சேர்த்து வரிகளை அறவிட்டு வருகின்ற போதும் சந்தைiயினை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்வும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசலக் கூடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வைத்திருக்க பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அத்தோடு குறித்த மலசல கூடம் அமைந்திருக்கும் பகுதியில் மரக்கறி மற்றும் பழக்கடைகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com