கொழும்பில் எனக்கொரு வீடு வேண்டும்... இந்நாள் பிரதமரிடம் கேட்கிறார் முன்னாள் பிரதமர்!
முன்னாள் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனக்கொரு வீடு பெற்றுத்தர வேண்டும் என இந்நாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரமராக இருக்கும் கால கட்டத்தில் தனது வீட்டில் வசித்துவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது கொழும்பில் ஏன் வீடு கேட்கிறார் என்பது புரியவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ஷ.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கொழும்பில் வீடு கொடுப்பது பொதுவான விடயம் சட்டரீதியானது என்றாலும், முன்னாள் பிரதமர்களுக்கு கொழும்பில் வீடு கொடுப்பது இதுவரை சட்டரீதியாக நிகழாத ஒரு விடயமாகும்.
இதனால் ரணிலின் வேண்டுகோளை பிரதமர் மகிந்தவுக்கு உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும், எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் ரணிலுக்கு கொழும்பில் வீடு கொடுப்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் முன்வைக்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

0 comments :
Post a Comment