Wednesday, January 8, 2020

ஆட்டத்தை ஆரம்பித்தது ஈரான்! ஈராக்கிலுள்ள இரண்டு அமெரிக்கத் தளங்கள் மீது குண்டுத்தாக்குதல்..

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு இராணுவ தளங்கள் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தியதை பென்டகன் உறுதிப்படுத்தியது.

தெஹரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல்-ஆசாத் தளத்திலும், புதன்கிழமை அதிகாலை எர்பில் தளத்திலும் ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருக்கும் தளங்கள் மீதான ஈரானிய தாக்குதல்களிலிருந்து மிகக் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய தொலைத்தொடர்பு அமைச்சர் முகமது-ஜாவாத் அசாரி ஜஹ்ரோமி, எங்கள் பிராந்தியத்தை விட்டு ஓடிவிடுங்கள்! என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க மீது ஈரானின் தாக்குதல்கள் முதல் நடவடிக்கையாகும், தெஹ்ரான் அமெரிக்க படைகளை விட்டு விடாது என்று ஈரானிய ஐஆர்ஜிசி படை தளபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தனது படைகளை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெறுவது பற்றி சிந்திக்க வேண்டும், அவர்களை எங்களது எல்லைக்குள் விட்டுவிடக்கூடாது என்று ஐஆர்ஜிசி படை தளபதி எச்சரித்துள்ளார்.

அதே சமயம், ஈராக்கில் அமெரிக்க படைகள் இருக்கும் தளங்களுக்கு எதிராக ஈரான் தனது ‘இரண்டாவது கட்ட’ தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது என்று ஈரான் உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது சுற்று தாக்குதல்கள் தொடங்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும், அல்-ஆசாத் தளத்தில் ஐஆர்ஜிசி நடத்திய ஏவுகணை தாக்குதல் வீடியோவை ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment