Wednesday, January 29, 2020

நீதித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மிக மோசமானது – பாராளுமன்ற உறுப்னர் சுமந்திரன்

வசந்த கரன்னாகொடவையும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தசநாயக்கவையும் வழக்கிலிருந்து விடுதலை செய்யும்படி சிபாரிசு செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் விடுத்திருப்பது மிக மோசமான ஒரு அரசியல் தலையீடு என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

சட்ட மா அதிபர் முன்னெடுத்த ஒரு வழக்கைக் கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து தடுப்பற்கான முயற்சி நடைபெறுகிறது. ஜக்கிய நாடுகளுக்கும் மற்றைய வௌிநாடுகளுக்கும் காண்பிப்பதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தை மட்டும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சட்ட மா அதிபரும் அதனை முன்னெடுத்திருந்தார். மற்ற விடயங்கள் செய்யப்படாமல் இருந்த போதிலும் கூட இந்த ஒரு விடயமாவது சரியாக நடக்கிறதா என்று நாங்கள் அவதானித்துக்கொண்டிருந்தோம். தற்போது பதவிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம் அதனை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரு மோசமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. ஆணைக்குழுவை வைத்து இப்படியான செயற்பாடுகளை செய்வது சட்ட விரோதமான செயற்பாடுஇ இதற்கு எதிராக நாங்கள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுமந்திரன் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் இவ்வாணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் கருத்துரைத்துள்ள சுமந்திரன், நீதிபதிகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் எதுவும் பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..

No comments:

Post a Comment