பலாலி-திருமலை மற்றும் மட்டக்களப்பு சேவையிலுள்ள விமானங்கள் பறப்பதற்கு தகுதியற்றவை. திடுக்கிடும் தகவல்.
பதுளை- ஹப்புத்தலையில் அண்மையில் விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று செயலிழந்து வீழ்ந்ததுடன் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தது யாவரும் அறிந்த விடயம். மேற்படி விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், வீழ்ந்து நொருங்கிய விமானப் படைக்கு சொந்தமான வை-12 ரக விமானம் பறப்பதற்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்ற திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
சண்டே டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்தகவலில் மேலும் விமானப் படையிடம் இன்னும் இதுபோன்ற இரண்டு விமானங்கள் இருப்பதாகவும் அவை தற்போதும் பலாலி-திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய உள்ளூர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஹெலி டுவர்ஸ் என்கிற உள்ளூர் விமான சேவை செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான சேவையை நடத்த இன்னும் ஏ.ஓ.ஐ என்கிற சான்றிதழ்கூட பெறப்படாத நிலையில்தான் உள்ளூர் விமான சேவை நடத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment