இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்கட்டாம். அரசியல் தரகர் அமைப்பொன்று அழைப்பு.
வரும் பெப்ரவரி நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு என தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில். குறித்த அழைப்பினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி இதனை தெரிவித்துள்ளார்
இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் அரசு அக்கறை செலுத்தாத நிலையில்இ சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது. இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று துக்க தினமாக அனைத்து மக்களும் அனுஷ்டிக்குமாறும்இ அன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த தினத்தன்று வடக்கிலும்இ கிழக்கிலும் ஒவ்வொரு போராட்டம் சம நேரத்தில் நாடார்த்தவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி அமைப்பான இவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றபோதும், மாறி மாறி வரும் அரசாங்கங்களுடன் பின்கதவால் தொடர்புகளை பேணி வருகின்றமை பல தடவைகளில் அம்பலமாகியுள்ளது.
அத்துடன் இவர்கள் அரசியல் கட்சியொன்றின் நிகழ்சி நிரலில் செயற்படுகின்றனர் என்பதும் குறித்த அரசியல் கட்சியானது புலம்பெயர் புலிப்பினாமி அமைப்புக்களின் பணத்திற்காக அரசியல் மேற்கொள்ளுகின்றனர் என்பதும் யாவரும் அறிந்த விடயம்.
0 comments :
Post a Comment