Tuesday, January 21, 2020

இந்திய போர்க்கப்பல் இலங்கையில்!

நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. கொழும்பு துறைக்குகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த இந்தியக் கப்பல் நங்கூரமிட்டது.

இலங்கை கடற்படையினர் இந்திய கப்பலையும் அதில் வந்த இந்திய கடற்படையினரையும் இலங்கை சம்பிரதாயத்திற்கு அமைய வரவேற்றனர். ஐராவன் போர்க்கப்பலின் கட்டளைத் தளபதி கமாண்டர் சுனில் சங்கர், இலங்கை மேற்கு பிரிவின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இதனிடையே இருவரும் நினைவு சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

ஐராவன் இந்தியக் கப்பல் இலங்கையில் எதிர்வரும் 22ம் திகதி வரை தரித்து நிற்கவுள்ளது.

இந்த காலத்திற்குள் இலங்கையில் நடைபெறும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளிலும் இந்தியப் படை கலந்து கொள்ளும் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com