Monday, January 20, 2020

சிறைச்சாலைகள் திணைக்களமும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள், மேஜர் ஜெனரல் ஒருவர் ஆணையாளர் நாயகமாக..

இலங்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக ஓய்வு பெற்ற அல்லது சேவையில் உள்ள ஒரு இராணுவ உயரதிகாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இந்நியமனம் எதிர்வரும் வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்பொருட்டு இந்தமுடிவுக்கு அரச வந்துள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தமது அரசியல் எதிரிகளை எதிர்காலத்தில் சிறையில் அடைக்கத்திட்டமிட்டுள்ள அரசு, அவர்களை தமக்கேற்றவாறு கண்காணிக்கவும், வதைக்கவும் அரசு தமக்கு விசுவாசமானவர்களை நியமிக்க முயற்சி செய்வதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

எது எவ்வாறாயினும் இதுவரை காலமும் சேவையிலிருந்த எந்த சிறைச்சாலைகள் ஆணையாளராலும் சிறைச்சாலைகளுள் இடம்பெறும் மோசடிகளை தடுக்கமுடியாது போனது என்பது யாவரும் அறிந்த உண்மை..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com