ரஞ்சனுக்கு விளக்கமறியல்! ஐக்கிய தேசிய கட்சி ரஞ்சனை முற்றிலும் கைவிடட்டது!
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுகள் தொடர்பாக நேற்று குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை இன்று பொலிஸார் கங்கொடவில் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரின் பணிப்புரையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
அரசியலமைப்பின்படி நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்தமை குற்றமாக கருதப்படுவதோடு இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பகல் நுகேகொடை நீதிமன்ற நீதவானின் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
விசாரணையின் பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி நுகேகொடை நீதிமன்ற நீதவான் வசந்த குமார இன்றுபகல் உத்தரவிட்டுள்ளார்.
அவரது குரல் பதிவினை பரிசோதனை செய்வதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
இதேநேரம் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கைது விடயத்தில் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடாத அதேதருணத்தில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டபின்னர் சென்று பார்வையிடவில்லை என பரவலாக பேசப்படுகின்றது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஆழும்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
0 comments :
Post a Comment