Saturday, January 4, 2020

கணவனின் மகளை கிறிக்கட் மட்டையால் துடுப்பாடி கிராமசேவகரும் தங்கையும் கைது!

நிக்கவரட்டிய பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருத்தியை துடுப்பாட்ட மட்டையால் போட்டுத்தாக்கிய இரு பெண்கள் மற்றும் நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று நிக்கவரட்டிய மஜிஸ்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று குறித்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளானதை வீடியோ செய்த அயல்வீட்டுக்காரர் அதனை அததெரண தொலை;காட்சிக்கு அனுப்பியதையடுத்து , அததெரண அக்காட்சியை ஒளிபரப்பு செய்திருந்தது. இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒரு கிராம சேவகர் என்பதுடன் தாக்குதலுக்குள்ளான சிறுமி அவரது கணவனின் முதலாவது தாரத்து மனைவியின் குழந்தை என தெரியவருகின்றது. அச்சிறுமி மீது கிராமசேவகரும் அவரது தங்கையும் இணைந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com