இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி
இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய கச்தி மின் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்படவுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரையோக விஞ்ஞான பல்கலை கழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.
நோர்வேயிலுள்ள பல்கலைகழகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கும் இவ் ஆய்வைக மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழகமும் நோர்வே பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது
0 comments :
Post a Comment