குடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி! அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்!
சமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் அவரது வீட்டில் விபச்சார நிலையம் நடாத்தி வருகின்றார். வெளி மாவட்டங்களிலிருந்தும், உள்ளுரிலிருந்தும் பெண்களை வரவழைத்து அவர் இச் செயலில் ஈடுப்பட்டுள்ளார் இதனால் கிராமத்தின் மரியாதை போய்க்கொண்டிருக்கிறது. எங்களது கிராமத்து பெண்களை திருமணம் செய்து கொடுப்பதில் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்த மக்கள் இதனை கிராமத்தில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்று தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராம மக்கள் இன்று(18) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
தங்களது கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவுச் செயற்பாடுகளால் கிராமத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதோடு, இளைஞர்கள், சிறுவர்கள் கூட பாதிக்கப்படுவதாகவும், தெரிவித்த கிராம மக்கள் தங்ளின் கிராமத்தின் பெயரை கூட கூற முடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதும் என்றும், தாய் நாளாந்தம் கூலிக்கு சென்று உழைத்து வந்து சாப்பிடும் குடும்பம் ஒன்றில் உள்ள சிறுவன் ஒருவன் ஐயாயிரம் ரூபா பணத்துடன் விபச்சார நிலையத்திற்கு சென்றுவந்துள்ளான். அத்துடன் விபச்சார நிலையத்திற்கு வெளியிடங்களிலிருந்து வரும் ஆண்கள் தவறாக அருகில் உள்ள வீடுகளின் கதவினை தட்டுகின்ற நிலைமயும் ஏற்பட்டுள்ளது.எனத் தெரிவிக்கும் மக்கள்
சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவு காரணமாக ஊரில் பெண்களை திருமணம் செய்துகொடுப்பதிலிருந்து, காணிகளை விற்பனை செய்வது வரை பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? ஒழுக்கமுள்ள கிராமத்தை சீரழிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள், எங்கள் ஊரை எங்களுக்க திருப்பித் தாருங்கள் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
0 comments :
Post a Comment