Wednesday, January 8, 2020

சிங்கப்பூர் சுதேச அமைச்சர் ஜனாதிபதி கோத்தா சந்திப்பு!

சிங்கப்பூர் சட்டம் மற்றும் சுதேச அமைச்சர் கே. சண்முகம் - ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடையே சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொழில் மற்றும் முதலீடுகளில் இருபகுதியினரதும் தொடர்பை விருத்தி செய்வதற்காக அங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல், சைபர் பாதுகாப்பு, அடிப்படைவாதத்திற்கெதிராகச் செயற்படுதல், வெளிநாட்டுச் சக்திகளின் அச்சுறுத்தல், புலனாய்வுப் பிரிவின் விருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் இருபகுதியினரதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குரோதத்தை வளர்க்கும் செய்திகள், இணையத்தின் மூலம் பரப்பப்படும் போலிச் செய்திகள் போன்றவற்றை இல்லாதொழிப்பதற்கும், மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டம் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment