Thursday, January 9, 2020

சானியா விடயத்தில் சுவிஸ் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை இதோ!

சுவிஸ் தூதுவராலயத்தின் பணிபுரிந்த கானியா பிரன்ஸிஸ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் செய்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்த சுவிஸ் புலனாய்வுப் பிரிவு, தனது விசாரணைகளின் முடிவினை சுவிஸ் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்த சுவிஸ் புலனாய்வுக் குழுவினர் நடாத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, கானியா பிரான்ஸிஸ் கடத்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளுமே இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும் சுவிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர். குறித்த பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடம்கூட சுவிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் செய்திப் பத்திரிகை வெளியிட்ட வெள்ளை வேன் சம்பவம் கூட சோடிக்கப்பட்ட பொய்யாகும் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் செய்தியுடன் தொடர்புடையவர் எனக்கூறப்படும் இலங்கையின் ஊடகவியலாளர் ஒருவர் தற்போது சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment