மார்ச் மாதத்திலிருந்து நெற்செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக...
எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நெல்லுற்பத்திக்குத் தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, இரண்டு ஹெக்ரேயர் வயலுக்குத் தேவையான பரிந்துரைக்கப்பட்ட உர வகையே வழங்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மகாவெலி வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இந்த நாட்களில் உரப் பற்றாக்குறைக்கான காரணம், உர இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ 6 பில்லியன் செலுத்தப்படவில்லை என்பதனால்தான் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment