Thursday, January 2, 2020

கசிப்பை ஒழிக்காது விட்டால் தற்கொலை செய்துகொள்வேன் - ஒன்பது மாதக் குழந்தையுடன் வீதியில் பெண்

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது பெண் ஒருவர் மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது. எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிமத்தியாக படிக்க முடியாதுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது. எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், இப்படி சொல்ல முயாத அளவுக்கு கசிப்பு பாவனையால் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்துள்ளேன். இனியும் என்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பில் கிராம அலுவலர், மற்றும் காவல்துறையினருக்கும் அறிவித்தும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com