வடக்கு தமிழனின் பழக்கதோஷம்.. ஈரானில் சண்டை வருகின்றதென எரிபொருளுக்காக முண்டியடிப்பு!
வடக்குத் தமிழர்களின் முட்டாள்தனமான பழக்கத்தோசத்தால் எரிபொருள் நிரப்புவதில் கடும் நெருக்கடி நிலை வடக்கில் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள யுத்த பதற்றம் காரணமாக மசகு எண்ணெண்ய் விலை ஏற்றம் ஏற்படும் என்றும், அத்தோடு எரிபொருள் தட்டுப்பாடும் நிலவும் என கருதிய வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பலர் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளனர்.
கொள்கலன்களுடனும், பரல்களுடனும் வடக்கில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பாடாது என அரசு அறிவித்த போதும் வடக்கு தமிழர்களின் பழக்கத்தோசம் காரணமாக செயற்கையான தட்டுப்பாடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
2009 க்கு முன் எல்லாவற்றுக்கும் வரிசையில் நின்று பழகிப்போன மக்கள் இன்றும் அதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்கும் மிக மோசனமான நிலை காணப்பட்டது. வடக்கு தமிழர்களின் இச் செயற்பாடு நகைப்பிற்குள்ளாகியுள்ளது.
0 comments :
Post a Comment