Sunday, January 12, 2020

வென்னப்புவவில் பொலிஸாரை அச்சுறுத்திய பிரதேச சபை உறுப்பினரின் தந்தை கசிப்புடன் கைது!

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி பிரனாந்துவின் தந்தை சட்ட விரோதமான முறையில் மோட்டார் சைக்கிளொன்றில் சாராயத்தை தொகையாக எடுத்துச்செல்லும்போது, வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வென்னப்புவ சிரிகம்பல பிரதேசத்தில் வசித்துவந்த வர்ணகுலசூரிய அசோக்க சமன் குமார என்ற 48 வயதுடைய ஒருவராவார்.

குறித்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் 30 சாராய போத்தல்களை எடுத்துச் செல்லும்போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் சட்ட விரோதமான முறையில் சாராயம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் சென்ற வருடம் பொலிஸ் வாகன அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அதற்குக் குந்தகம் விளைவித்தது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினரான துலக்ஷி பிரனாந்து என்பவரின் தந்தை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவருடைய சகோதரி இவ்வாறு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com