Thursday, January 2, 2020

ஈபிடிபி காரியாலயத்தை சுற்றிவளைத்த கஜேந்திரர்களின் அடியாட்கள்..

யுத்தத்தில் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் என தம்மை அழைத்துகொண்டு அரசியல் கட்சி ஒன்றின் அடியாட்களாக செயற்பட்டுவரும் குழுவொன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமைக் காரியாலயத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யவேண்டுமென கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதன்போது அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கிநின்ற பதாதைகளை அவர்களிடமிருந்து பிடுங்க முற்பட்டபோது, ஆர்பாட்டக்காரர்களுக்கும் ஈபிடிபி யினருக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

காணமலாக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்றும் அவ்வாறானவர்களுக்கான தீர்வாக மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கவே முடியுமென நாட்டின் ஜனாதிபதி தெட்டத்தெளிவாக அறிவித்துள்ள நிலையில், டக்ளஸ் தேவானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எனப்படுவோரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வெறுமனே வாக்குகளை நோக்கமாக கொண்ட இச்சந்திப்பில் குறித்த நபர்களுக்கு நியாயம் தேடித்தருவதாக டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். அதற்கு கைமாறாக அம்மக்களிடம் அவர் தனக்கு வாக்களிக்குமாறும் வேண்டியிருக்கின்றார். ஆனால் இவ்விடயத்தில் டக்கிளஸ் ஒரு பெட்டைக்கோழி மாத்திரமே, அவர் கூவி பொழுதுவிடியப்போவதில்லை. காணாமலாக்கப்பட்டோர் எனப்படுபவர்கள் எவரும் இல்லை என அரசு பலமுறை அறிவித்துள்ள நிலையில் டக்கிளஸால் பெற்றுக்கொடுக்கக்கூடிய தீர்வு யாது?

காணமாலாக்கப்பட்டோர் என்பதும் அதற்கான தீர்வு என்பதும் வெறும் வாக்கு சேகரிக்கும் கபடநாடகமாகும். டக்ளஸ் அவர்களுக்கு தீர்வு தேடித்தருகின்றேன் என்றபோது, எதிர் அரசியல்புரிவோர் டக்ளஸ்தான் கடத்தியது என்கின்றனர். எனவே டக்ளஸ் கடத்தினாரா இல்லையா என்பதை நீதிமன்றில் நிரூபிப்பதை விடுத்து தெருவில்நின்று ஏனைய மனிதர்களின் இயல்பு வாழ்விற்கு குந்தகம் விளைவிப்பது தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்..








No comments:

Post a Comment