கோத்தாவின் கூட்டத்தைத் தட்டிக்கழித்தனர் முன்னாள் ஜனாதிபதிகள்!
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையைக் கேட்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள் வராமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பிரதாயபூர்வமாக முன்னாள் ஜனாதிபதிகள், தூதுவர்கள், தலைமை நீதிபதி, நீதிபதிகள், சட்டமா அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வுக்காக அழைக்கப்படுவது வழக்கம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய பாராளுமன்றின் அமர்வை ஆடம்பரமின்றி, ஆரம்பித்து வைத்தார். அந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் அவர்கள் எவருமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :
Post a Comment