Friday, January 3, 2020

முன்னணியில் போட்டியிட்ட இருவர் இன்று எதிர்கட்சியில் இணைந்துகொண்டனர்!

மறைந்த முன்னாள் பா.உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடைவெளிக்காக இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட வருண லியனகே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் போய் அமர்ந்துகொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டதுடன், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சியின்முக்கிய உறுப்பினர்களான குமார வெல்கமவும் ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்களின் கரகோசத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் அமர்ந்த குமார வெல்கம தனது ஆசனத்திலிருந்து ஆளும் கட்சியிலிருந்த தயாசிரி ஜயசேக்கரவுக்கு கையசைத்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com