Friday, January 3, 2020

ராஜித்த ஒரு திருடன்... குற்றம் சுமத்துகிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு சோரம் போனவர்கள் யார் யார் என்பதை வெளியிடுவதற்குத் தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஊடகச் சந்திப்பொன்றின் போது தெரிவித்தனர்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு நூல் கட்டுவதற்கு வைத்தியசாலைக்குச் சென்றதற்கான பின்னணி யாது? என்பது பற்றியும் அவர்கள் தெளிவுறுத்தினர்.

எவ்வாறாயினும் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு விடையளிக்கும் வகையில் முருத்தெட்டுவே தேரர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ராஜித்த திருடன் என்றால் விசாரணை நடாத்த வேண்டும் என்று தான் கூறியது, தன்னையறியாமல் நிகழ்ந்த குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனைச் சரிசெய்யுமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

'அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எங்களுக்கு உதவி செய்யாதிருந்தாலும், 86 யுத்தத்தில் எங்களுக்கு உதவி புரிந்தார். நான் அவரை நோயாளன் என்ற தோரணையிலேயே சந்திக்கச் சென்றேன். நான் பிரித் நூல் கட்டி, அவருக்கு ஆசி வழங்கினேன். ராஜித்தவுக்கும் எனக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் செய்த தீங்குகளுக்கு அவருக்கு பலன் கிட்டும். மேடையில் வீரன் போல முன்னர் கதைத்தார். இன்று வீரத்தன்மை குறைந்த வண்ணமே உள்ளது...எனக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது' எனவும் தேரர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com