கோத்தபாய ராஜபக்ஸ உண்மைகளையே பேசுகின்றார் ஆகவே சரியானதையே செய்வார் - சம்மந்தன்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ உண்மைகளையே பேசுகிறார் ஆகவே அவர் சரியானவற்றேயே செய்வார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(08) இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.
அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியவில்லை.
எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரு நாட்கள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரா. சம்மந்தன் உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கோத்தபாய ராஜகபக்ஸவை மிகவும் மோசமாக மக்கள் முன் பேசி வந்தனர். கோத்தபாய படுகொலையாளி அவரிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் என்றெல்லாம் பேசியவர்கள் இன்று இவ்வாறு பேசுகின்றனனர் என பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment