சட்டவிரோத செயற்பாட்டை சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினருக்கு அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் அமைச்சர்.
ரத்துகஸ்பிட்டிய நான்காம் கட்டை பிரதேசத்தில் செயற்பட்டுவந்த சட்டவிரோத கல்லுடைக்கும் பிரதேசத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது, அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் விசேட அதிரடிப் படையினருக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
விசேட அதிரடிப் படையின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் குறித்த விடயத்திற்கு இடையூறு மேற்கொள்ளவேண்டாம் என அவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும் முன்னாள் அமைச்சரின் இடையூறை பொருட்படுத்தாத விசேட அதிரடிப் படையினர் குறித்த சட்டவிரோத கல்குவாரியை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் டெட்னேற்றர்கள் மற்றும் வெடிமருந்துகள்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரசுடன் இணைந்துள்ள பல பிரபலங்கள் சட்டம் ஒழுங்கை மதிக்காது நாட்டின் வளங்களை சுரண்டி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.
0 comments :
Post a Comment