Friday, January 10, 2020

முகமாலைப் பிரதேசத்தில் அதிகம் கண்ணிவெடிகள்... அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது கண்ணிவெடியகற்றும் பிரிவினர்

கிளிநொச்சி முகமாலைப் பிரதேசத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலக்கீழ் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பிரதேசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் முகமாலைப் பிரதேச காட்டுக்குள் செல்வதைக் குறைத்துக்காெள்ளுமாறு கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கில் கண்ணி வெடி அகற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்கள் கிளிநொச்சி - முகமாலைப் பிரதேசத்திலுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தக் காலப்பிரிவில் பெரும்பாலும் சண்டைகள் ஏற்பட்டதனாலும், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பினரின் கடைசி முகாம் முகமாலைப் பிரதேசத்தில் அமைந்திருந்ததனாலும், வடக்கில் பெரும்பாலும் நிலக்கண்ணி வெடிகள் அதிகமாக புதைக்கப்பட்டுள்ள இடமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, அவ்வாறு புதைக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நிலக்கீழ் கண்ணிவெடிகள் அதிகமாக முகமாலைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேசத்தை பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவித்துள்ளது நிலக்கீழ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com