Saturday, January 18, 2020

ஐ.தே கட்சியின் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மஹிந்த ஒட்டுக்கேட்க வஜிர செய்யும் காரியம் தெரியுமா?

அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுவிவகாரங்கள் ஈரம் காயமுன்னர் பத்திரிகையில் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக அக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் மற்றும் மத்திய குழுக்கூட்டங்களில் பேசப்படும் விடயங்கள் கூட அக்கட்சியின் பிரதான எதிரியான மஹிந்த ராஜபக்சவிற்கு உடனுக்குடன் தெரியவந்துள்ளது.

இத்தகவல்கள் எவ்வாறு இத்தனைகெதியின் வெளியே செல்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சினர் தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது, உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ஒன்றுகூடல்கள் இடம்பெறும்போது அக்கட்சியின் முக்கியஸ்தரான வஜிர அபயவர்த்தன மஹிந்தவிற்கு அழைப்பை ஏற்படுத்தி பேசப்படும் விடயங்களை அவர் கேட்டுக்கொள்ளும் பிரகாரம் செயற்பட்டுவருவது தெரியவந்துள்ளது.

அரசியல் சூழ்சிகளை மேற்கொண்டு கட்சிகளை துண்டுதுண்டாக உடைப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ள மஹிந்த எதிர்வரும் காலங்களில், இக்கூட்டங்களில் பேசப்படும் விடயங்களை ஆராய்ந்து முரண்பாடுள்ளவர்களின் நாடிகளை பிடித்துப்பார்த்து ஐக்கிய தேசியக் கட்சியை துண்டுகளாக உடைத்து போடுவார் என்று நம்பப்படுகின்றது.

தீவிர வளர்ச்சி கண்டுவந்த ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளை அவர் இவ்வாறே உடைத்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com