சுவிட்சர்லாந்தின் புலனாய்வு குழுவொன்று கொழும்பில் முகாமிட்டுள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இலங்கை-சுவிட்சர்லாந்திடையே நீண்டதோர் ராஜதந்திரப் போர் நடந்து வந்தது.
மேற்படி சம்பவம் பொய் என குறித்த அதிகாரியை விளக்க மறியலில் அடைத்த இலங்கை அரசாங்கம் அவரது முறைப்பாட்டால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியது.
இந்நிலையில் குறித்த ஊழியரின் முறைப்பாடு தொடர்பாக சுவிட்சர்லாந்து அரச புலனாய்வுக்குழுவொன்று இலங்கை விரைந்துள்ளதுடன் அவர்கள் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து;ள்ளது.
அவர்கள் இலங்கை அரசினால் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் மற்றும் தூதரக ஊழியரின் முறைப்பாட்டிலுள்ள உண்மைத் தன்மை தொடர்பாக துப்புத்துலக்கி சுவிட்சர்லாந்து அரசிற்கு அறிக்கையிடவுள்ளனர்.
இதேநேரம் அவர்கள் குறித்த ஊழியரை விசாரித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
குறித்த ஊழியர் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறிய நேரத்தில் அவர் அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருந்துள்ளதை அவரது தோழி உறுதி செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment