யானையிலிருந்து இறங்கி வீட்டினுள் புகமாட்டேன். அனைத்தும் பொய் என்கின்றார் அசிட் கலா!
வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியன் கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ .சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும், எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லை, அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யாழ் தேர்தல் தோகுதியில் போட்டியிடுவேன். என உறுதிப்படத் தெரிவித்தார்.
பாராளுமன் உறுப்பினர் சுமந்திரன் என்னிடம் 15 கோடி கேட்டதாக வௌவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மக்களை குழப்புவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் திட்டமிடப்பட்டு பரப்பட்ட வதந்தி இது எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment