Monday, January 20, 2020

சஜித் பிரேமதாச அதுக்கு சரிபட்டுவரமாட்டார் அவர் பொருத்தமற்றவர் - வஜிர அபேவர்தன

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர், என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவினால் சிங்க பெளத்த மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய அவர் , கட்சியின் தலைமைத்துவத்திற்கு தற்போது சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் எனவும் தெரிவத்தார்.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு மாத்திரம் எமக்கு கிடைக்காது போயிருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 22 இலட்சம் வாக்குகளில் மிகவும் மோசமான் தோல்வியை நாம் சந்தித்திருக்க நேரிட்டிருக்கும்.கட்சியின் யாப்புக்கு அமைய செய்ய வேண்டிய வேளையில் யாப்பினை மீறி செய்ய முற்படுவதே கட்சிக்குள் குழப்பங்கள் நிலவ காரணமாக அமைந்துள்ளது


இன்று ஐக்கிய தேசிய கட்சி ஒழுக்கம் இல்லாத கட்சி என்ற நிலைமைக்கு சென்ருகொண்டுள்ளது. ஒழுக்க விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமையும் இதன் ஒரு குறைபாடு என்றே நான் கருதுகின்றேன். இன்றும் சகல நேரங்களிலும் கட்சியின் தலைவரை விமர்சிக்கவும் அவருக்கு எதிராக மோசமான கருத்துக்களை முன்வைக்கவும் உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.இதன் விளைவு கட்சியாக அனைவரையும் சென்றடையும் என்பதை இவர்கள் மறந்து விடுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com