Thursday, January 2, 2020

வீழ்ச்சியடைந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை புதிய ஜனாதிபதியினால் உயர்ந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திர விசாக் காலப்பிரிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த உல்லாசப் பிரயாணிகளின் சுதந்திர விசாவானது ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையே இருந்தது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளின் பேரில் 3 மாதங்களுக்குஇக்கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவைப் பத்திரமும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடுகள் 48 இற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சுதந்திர விசா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமைக்குக் காரணம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து உல்லாசப் பிரயாணிகளின் வருகை மிகவும் குறைவாகக் காணப்பட்டமையினாலாகும். அதற்கேற்ப அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இத்தாலி, யப்பான், ரஷ்யா, பிரான்சு, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 48 நாடுகளுக்கு சுதந்திர விசா வழங்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலானது சென்ற 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. 2019 ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை 37,802 ஆகும். தேசிய பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியானதும் இந்நிலைமை ஏற்பட்டது. எவ்வாறாயினும் சென்ற நவம்பர் மாதத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவானதும் இலங்கைக்கு வருகைதருகின்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை மென்மேலும் அதிகரிக்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment