இரண்டு மாத குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை- கிளிநொச்சிப் பணிப்பாளர் உறுதி
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் உயிரிழந்த புதுமுறிப்பை சேர்ந்த இரண்டு மாத குழந்தையின் இறப்புத் தொடர்பில் உடனடியாகவே உரிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துதாம் நேரடியாகவே கவனம் செலுத்துவதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறானா குற்றச்சாட்டுகள் எழாத வகையில் வைத்தியசாலையும், பொதுச் சுகாதாரத்துறையினரும் செயற்படும் வகையில் தமது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்திருப்பதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியசாலையை மீண்டும் நோயாளிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்றவேண்டும் என்பதே பொதுமக்களது ஒரே வேண்டுகோளாகும்.
0 comments :
Post a Comment