கோட்டாவை வாழ்த்தினார் சம்பந்தன்..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று முற்பகல் நடைபெற்றது.
அதன் பின்னர் சபை நடவடிக்கை பிற்பகல் ஒருமணிவரை ஒத்திவைக்கப்பட்ட பின் தேநீர் விருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டது.
இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்து அளவளாவினர்.
தமிழ் மக்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். சிங்கள மக்களும் உங்களுக்கு அதிகபடியான வாக்குகளை அளித்துள்ளனர். ஆதலால் இருவரும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை அறிவதற்கு பேச்சு நடத்துவோம் என்று இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment