Monday, January 13, 2020

தண்ணீருக்காக அமைச்சுப் பதவியை இழக்கப்போகிறாராம் வாசு!

தண்ணீரற்ற மக்களுக்கு தண்ணீர் வசதி பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் போதியளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யாதபோது தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, தண்ணீர் அற்ற மக்கள் தொடர்பில் தான் பொறுப்புடையவனாக இருக்கின்றேன் என்றார்.

அவ்வாறான மக்களுக்கு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை சென்ற அரசாங்கம் மேற்கொண்டது. அதிலும் வித்தியாசமான பகுதியொன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கான கேந்திர வேலைத்திட்டம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். மக்கள் நன்மையடையும் விதமாக அது நடைபெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தான் சொல்கின்ற விடயங்கள் கனவில் சொல்லும் கதைகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்ட அமைச்சர், தான் அவ்வாறான ஒரு நபர் எனவும், இடதுசாரி சோசலிஸ்ட் எனவும் குறிப்பிட்டார்.

தனக்கு இடையில் நிற்க முடியாது எனக் குறிப்பிட்ட இ. அமைச்சர், கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வழங்கப்படுகின்ற முறையிலேயே நீர் வழங்கலுக்கும் குறித்த தொகை ஒதுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும், அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் தான் அமைச்சுப் பதவியில் நிற்க மாட்டேன் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், ஏழைகளுக்கு தண்ணீர் இல்லை என்றும், ஏதேனும் இருப்பவர்களுக்கு யாதேனும் செய்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com