Thursday, January 2, 2020

சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி கோத்தாபய!

இருநாள் உத்தியோகபூர்வ சுற்றுலாவுக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், எதிர்வரும் 14 ஆம் திகதி அவர் சீனா பயணமாகவுள்ளார் எனவும் தூதுவராலயச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சீனாவில் உத்தியோகபூர்வ சுற்றுலாவில் பங்குகொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் கேட்டுக்கொண்டதை ஏற்று, ஜனாதிபதி இச்சுற்றுலாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இந்தச் சுற்றுலாவில் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளதுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பயணமாகவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி சென்ற நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com