கிளிநொ்சியில் வெடிக்காத நிலையில் வெடிப்பொருட்கள்..
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.தனியார் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்கின்ற போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிப்பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் காணி உரிமையாளர் கனரக வாகதனத்தைக்கொண்டு தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடி பொருட்களை அவதானித்தள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு செய்த காணி உரிமையாளர், அதனை பாதுகாப்பாக அகற்றுமாறு தெரிவித்தள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினருடன் உதவியோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
0 comments :
Post a Comment