கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் அதிரடியாக தரையிறங்கினார் கோத்தபாய
நாட்டின் ஜனாதிபதி அவ்வவ் போது திடீர் திடீரென பல்வேறு அரச நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருகின்றார்.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி திடீரென விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்வதோடு, மக்களுக்கான சேவைகள் எப்படி இடம்பெறுகிறது என்பதனையும் அவதானித்து வருகின்றார். அந்தவகையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்தபாய ராஜபக்ஸ் அவர்கள், இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றுள்ளார் இதனால் அதிகாரிகள் திகைத்துபோய் நின்றனர்.இந்த திடீர் கண்காணிப்பு விஜயம் மூலம் அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளதோடு, அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்
0 comments :
Post a Comment