Tuesday, January 14, 2020

'இலங்கைக்குத் தொடர்ந்து ஆயுங்களை வழங்குவோம்!' - ரஷ்ய வெளிநாட்டமைச்சர்

ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சார்ஜி லெவரொப் இன்று (14) பிற்பகல் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் ஒன்றிணைந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இலங்கை இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களைத் தொடர்ந்து நாங்கள் வழங்குவதற்கு ஆவன செய்வோம் என அவர் அச்சந்திப்பில் தெரிவித்தார்.

இருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திறங்கிய அவர், இன்று அதிகாலை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

அங்கு ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர், இரு நாடுகளுக்களுக்குமிடையிலான வியாபாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் ரஷ்யாவுடன் ஒத்துழைத்தமைக்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

42 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இலங்கைக்கு வந்துள்ள வெளியுறவு அமைச்சர் இன்று மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

No comments:

Post a Comment