நல்'லாட்சி அரசின் அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க ஆணைக்குழு - ஜனாதிபதி
2015ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி கோட்டாபயவினால், மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தயா சந்திரசிறி, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்ணான்டோ ஆகியோரே, இந்த ஆணைக்குழுவில் அடங்குகின்றனர்..
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆணைக்குழுவானது, தனது விசாரணைகளை மேற்கொண்டு, 06 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment