Thursday, January 9, 2020

கொச்சிகடை ஆலயத்தை நோட்டமிட்ட முஸ்லிம் இருவர் அதிரடியாக கைது!

கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பிரவேசித்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கடலோர பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதலாம் திகதி இவர்கள் இருவரும் அந்தோனியார் தேவாலயத்திற்கு வழிபட வந்ததாக ஆலய பொலிஸாரிடம் கோரிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் ஆலய ஆயர் அனுமதித்ததை அடுத்து உள்ளே பிரவேசித்த சந்தேக நபர்கள் அங்கு சுற்றிலும் நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் சி.சி.டி.வி உதவியுடன் அடையாளம் காணப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் உட்பட பொலிஸாரும் இணைந்து இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com